புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2020

மீண்டும் உடுப்பிட்டியில் கொள்ளை: லக்கி குழு?
வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரது உறவினர் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

பகல் வேளை அரசினது கொரோனா உதவி தொகை பெற சென்றிருந்த வீடொன்றை இலக்கு வைத்தே கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது.

சுமார் பத்து இலட்சம் பெறுமதியான நகை மற்றும் ஒரு தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி பகுதியில் கொள்ளைகளை மேற்கொண்டிருந்த கும்பல் ஒன்றை கைது செய்துவிட்டதாக வல்வெட்டித்துறை காவல்துறை ஊடகங்களிற்கு அறிவித்துக்கொண்டிருந்த அதே வேளை பட்டப்பகலில் உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியில் இக்கொள்ளை நடைபெற்றுள்ளது.

கொள்ளையினையடுத்து திரண்ட இளைஞர்களால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சிலர் தாக்கப்பட்டனர்.

இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முக்கிய சந்தேக நபர்கள் பற்றி விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைதான முக்கிய போதை பொருள் கடத்தல் குழு தலைவனான லக்கி குழுவை சேர்ந்த தரப்புக்கள் மீதே இக்கொள்ளை தொடர்பிலும் சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.

ad

ad