-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

25 மே, 2020

முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி;இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு

மருத்துவமனை நிர்வாகம்துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (மே 24) சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.


இந்நிலையில், துணை முதல்வர் நலமாக இருப்பதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார்.

இன்று மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டதில் அவர் உடல்நலமுடன் உள்ளார். இன்று மாலை துணை முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்