புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மே, 2020

சிறைக்குள் கொரோனா ஆபத்து - விடுதலை செய்யக் கோரும் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், இவற்றைக் கவனத்திற் கொண்டு தம்மை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டுள்ளார்கள்.1

இது தொடர்பில் அவர்கள் அனுப்பிவைத்துள்ள மனு ஒன்றில், “தற்போதைய சூழ்நிலையில் எமது விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வினயமாய் வேண்டுகிறேரம். தற்போது கொரானா அதிகமாகமாய் பரவுகின்றது. சிறையில் சரியான சுகாதார வசதியில்லை. மருத்துவ பரிசோதனை சரியாகனடைபெறுவது இல்லை.

நாம் இங்கு 17,19,20 வருடங்களாக மிக நீண்ட காலமாகமாக தடுத்துவைக்கபட்டுள்ளோம். குடும்பத்தை பிறிந்து அதிக காலாம் சிறையில் துன்பபடுகின்றோம். தயவு செய்து இந்தநிலை கவனத்தில் எடுத்து எம்மை விடுதலை செய்வதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொற்று எம்மை தாக்குவதற்கான சந்தர்பம் சிறையில் அதிகம் இருப்பதால் விரைவில் நடவடிக்கை எக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்கள் பலருடனும் இது குறித்து அவர்கள் பேசியுள்ளார்கள்.