புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மே, 2020

www.pungudutivuswiss.com
மனித உரிமை செயற்பாட்டாளரின் நாய் சுட்டுக் கொலை - சந்தேக நபர் கைது
மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோவின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோவின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு – பெரியமுல்லை புனித அந்தோனியார் வீதியில், உள்ள பிரிட்டோ பெர்னான்டோவின் வீட்டில் வளர்க்கப்பட்ட மெக்ஸ் எனப்படும் நாய், இன்று அதிகாலை ஆறு மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோ,

‘எனது வீட்டில் வளர்க்கப்படும், மெக்ஸ் என்று அழைக்கப்படும் நாயை இயற்கை கடன்களை கழிப்பதற்காக இன்று காலை ஆறு மணியளவில் வெளியில் செல்ல அனுமதித்தேன்.

ஐந்து நிமிடத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. நான் வீதிக்கு வந்து பார்த்த போது, எனது நாய் இரத்தக் காயங்களுடன் தடுமாறியபடி வந்தது. எனது வீட்டின் முன்பாக, வீதியில் விழுந்து இறந்து போனது.

எமது வீட்டுக்கருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரையே நான் இது தொடர்பாக சந்தேகிக்கிறேன். அவரது வீட்டின் முன்பாகவே நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் .