7 மே, 2020

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி எனத்தகவல்தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடியை தொட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கடைகள் ஒவ்வொன்றாக திறக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


இதன்படி, ஏறத்தாழ 40 நாட்களுக்கு பிறகு இன்று சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டன. இந்த நிலையில், இன்று ஒருநாளில் மட்டும் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி வரை மது விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன. வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று மிக அதிக வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.