7 மே, 2020

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் இரண்டாவது கொரோனா அலைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் நிபுணர்கள்


சுவிட்சர்லாந்து இன்னும் சில நாட்களில் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த உள்ளது.

ஆனால், அதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மே மாதம் 11ஆம் திகதி சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளின் இரண்டாவது நிலைக்கு செல்ல இருக்கிறது, அதாவது கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் நெகிழ்த்தப்பட உள்ளன.

உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி மையங்கள், பள்ளிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட உள்ளன.

அத்துடன் பொதுப்போக்குவரத்தும் மீண்டும் செயல்பட உள்ளது.

இந்த செய்தியை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், இவ்வளவு சீக்கிரம் கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது சுவிட்சர்லாந்தில் இன்னொரு கொரோனா அலையை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளனர் நிபுணர்கள்.


அவசரப்படுவதால் மக்கள் அதற்கு மிகப்பெரிய விலையைச் செலுத்தவேண்டி வரலாம் என்கிறார் சுவிஸ் சுகாதார இயக்குநர்களின் தலைவரான Heidi Hanselmann.

கடந்த சில வாரங்களாக வேதனைப்படுத்திய இந்த கட்டுப்பாடுகளால் நாம் அடைந்துள்ள நன்மைகளை விட்டுவிடக்கூடாது என்கிறார் அவர்.

ஏற்கனவே, சுவிஸ் கொரோனா எதிர்ப்பு குழுவின் தலைவரான Matthias Egger, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது நாம் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.