புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 மே, 2020

www.pungudutivuswiss.com
மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தினை மீண்டும் திறப்பதற்கான முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல மாவட்டங்கள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது.

இந்தநிலையிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வருகின்ற ஜுன் மாதத்தில் மீண்டும் திறக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.