www.pungudutivuswiss.com
ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், யாழில் பட்டப்பகலில் வாள் வெட்டு தாக்குதல்
யாழ் குடாநாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டுக்குழுவினர் 10 மோட்டார் சைக்கிள்களில் புங்கன்குளம் வீதி வழியாக சென்று முத்திரைச் சந்திக்கு அண்மித்த பகுதியில் நின்ற 2 முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியதுடன் இருவருக்கு வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பகல் வேளைகளில் இத்தகைய வாள்வெட்டுக் குழுவின் நடமாட்டம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.