புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2020

www.pungudutivuswiss.com
France Noisy-le-Sec : அனுமதி பத்திர சோதனை நடத்திய நான்கு 'போலி காவல்துறையினர்

நான்கு போலி காவல்துறையினர் வீதியில் சென்றவர்களிடம் அனுமதி பத்திர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முப்பது வயதுகளையுடைய ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் கொண்ட குழு ஒன்று இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடந்த வாரம் முழுவதும் Noisy-le-Sec மற்றும் Saint-Denis ஆகிய பகுதிகளில் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். தங்களை காவல்துறையினர் போன்று அடையாளப்படுத்தி, வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதோடு, அனுமதி பத்திரம் உள்ளதா எனவும் சோதனையிட்டுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தண்டப்பணம் அறவிட்டதோடு கொள்ளைகள் இட்டு தப்பிச் சென்றும் உள்ளனர். ஒவ்வொரு தடவையும் €1,500 யூரோக்களில் இருந்து €3,000 யூரோக்கள் வரை கொள்ளையிட்டுள்ளனர். மொத்தமாக €40,000 வரை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் குறிப்பாக வெளிநாட்டவர்களை குறிவைத்தே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும் என்பதாலும், அவர்களால் மிக இலகுவாக பிரெஞ்சு பேச முடியாது என்பதாலும் அவர்களை இந்த கும்பல் குறிவைத்துள்ளது.
குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்