புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2020

www.pungudutivuswiss.com
லண்டனில் தவித்த 208 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்
லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த 208 இலங்கையர்களும் நேற்று இரவு லண்டனில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோர் அவர்களின் வசதிகளுக்கேற்ப சில ஹோட்டல்களில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசு அல்லது இராணுவத் தலையீடு இன்றி நேரடியாகவே அவர்கள் ஹோட்டல்களுக்கான கட்டணத்தை செலுத்தி தங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, மக்கள் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் மக்கள் மிகவும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டனில் இருந்து வந்த மாணவர்கள் ஒரு தொகுதியினர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.