புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2020

www.pungudutivuswiss.com
ஊர்காவற்றுறை வாள்வெட்டில் இளைஞரின் கை துண்டிப்பு

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை, சின்னமடுப் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகய ஒருவர் கை துண்டாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை, சின்னமடுப் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகய ஒருவர் கை துண்டாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னமடுப் பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்துள்ளது. இதன்போது 31 வயதுடைய ஒருவரது கை துண்டாகும் வகையில் வாள் வெட்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஏற்பட்ட சிறு தகராறே நேற்றைய தினம் குழு மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குழு மோதலின்போது வாள் வெட்டுக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த கொடூர வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.