புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2020

www.pungudutivuswiss.com
தொடர்ந்து சில நாள்களுக்கு சமூக அளவில் கிருமித்தொற்று குறைந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் : சுகாதார அமைச்சர்
சிங்கப்பூரில் COVID-19 கிருமி மீண்டும் பரவுவதைத் தவிர்க்க சூழலை ஆராய்ந்து கட்டங்கட்டமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

கிருமித்தொற்றைத் தற்போது முற்றிலும் முறியடிப்பது கடினம் என்ற அவர், கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதுடன் பெரிய குழுமங்கள் ஏற்படாமல் இருப்பதும் முக்கியம் என்றார்.


உலக அளவில் நோய்த்தொற்று குறையவும், அதைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும் காலம் எடுக்கும் என்று தெரிவித்தார் அவர்.
அதேவேளை, புதிய வாழ்க்கை முறைகளைகளுக்கும் சமூக வழக்கங்களுக்கும் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியும் திரு. கான் பேசினார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னர், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மிகக் குறைவாகக் இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்தில் கிருமிப் பரவல் தொடர்ந்து ஒற்றை இலக்கத்திலோ, அறவே இல்லாமலோ ஆகியிருக்க வேண்டும் என்றார்.
வெளிநாட்டு ஊழியர்களிடையே ஏற்படும் கிருமிப்பரவல் குறைவதும் முக்கியம் என்ற அவர், இல்லாவிடில் தங்கும் விடுதிகளிலிருந்து சமூகத்திற்குப் நோய்ப்பரவல் அபாயம் ஏற்படலாம் என்றார்.
வெளிநாட்டிலிருந்து திரும்புவோரிடமிருந்து சமூகத்தில் ஏற்படும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, மற்ற நாடுகளின் கிருமித்தொற்று சம்பவங்களையும் அவற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவது முக்கியம் என்றார் அமைச்சர்.
பாதுகாப்பான முறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார் திரு கான்.
கிருமித்தொற்றை முன்னதாகவே கண்டுபிடிக்கப் பரிசோதனைகளுக்கான ஆற்றலையும் அளவையும் அதிகரிக்கவேண்டும் என்றார்.
தொடர்பில் வந்தவர்களை உடனடியாகக் அடையாளம் கண்டு, நோய் பரவாமல் தடுப்பதும் அவசியம் என்றார் அவர்.
தொடர்புடைய தலைப்புகள்