புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2020

www.pungudutivuswiss.com
போதை கும்பல் வேட்டை:ஒருவன் தற்கொலை
வடமராட்சியின் முன்னணி போதைப்பொருள் முகவரான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் கைதாகியுள்ளான்.உடுப்பிட்டி பகுதியில் காங்கேசன்துறை விசேட காவல்துறை பிரிவு நடத்திய சுற்றி வளைப்பின் போதே லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் கைதாகியுள்ளான்.

இதனிடையே அவனது நண்பனும் போதை பொருள் விற்பனை முகவர்களுள் ஒருவனுமான ஜீவசங்கரி எனும் உடுப்பிட்டியை சேர்ந்த மற்றொருவன் கைதிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

நேற்றைய தினம் விசாரணைகளிற்காக காவல்துறை இவனை தேடிச்சென்றிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்ததாகவும் பின்னர் வீட்டின் பின்புறமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் வல்வெட்டித்துறை காவல்துறை எல்லைக்குட்பட்ட உடுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் கும்பல் ஒன்று அகப்பட்டிருந்தது.

அக்கும்பல் அருகாகவுள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலை மாணவர்களிற்கு கெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்தாக சந்தேகிக்கப்படுகின்றது.

உடுப்பிட்டி வர்த்தக நிலையமொன்றில் ஊரடங்கு வேளையில் சிகரட் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை திருடிய கும்பல் ஒன்றை இலக்கு வைத்து காவல்துறை விரித்த வலையிலேயே இக்கும்பல் அகப்பட்டிருந்தது.
தமது சுகபோக வாழ்க்கைக்கென வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இக்கும்பல் அந்த பணத்தில் கெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்து வகை தொகையின்றி பாடசாலை மாணவர்களிற்கு இலவசமாக வழங்கி அவர்களையும் போதைப்பொருளிற்கு அடிமையாக்கியுள்ளது.

அதிலும் கொரோனா தொற்றினால் பாடசாலைகள் முடங்கியுள்ள நிலையில் மாணவர்களிடையே போதைபொருள் விநியோகிக்கப்பட்ட மாணவ சமூகம் சீரளிக்கப்பட்டமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய சந்தேக நபரான நிலக்சன் தனது மனைவி பெயரில் நகைகள்,வாகனங்களை வாங்கி குவித்துள்ளதுடன் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டமையும் தெரியவந்துள்ளது.


மற்றொரு சந்தேக நபரான துமிலன் என்பவன் மாடி வீடு மற்றும் கடைத்தொகுதியென திருட்டு பொருட்களை முதலிட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவங்களில் கைதான ஜவர் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழ்.சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஏழு வழக்குகள் வல்வெட்டித்துறை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


காவல்துறை விசாரணைகள் தொடர்வதுடன் நகைகள் உள்ளிட்ட பல சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் தனது காதலி பெயரில் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவளிற்கு விலையுயர்ந்த பரிசில்களை வாங்கி குவித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஆசிரியையான குறித்த பெண்ணும் விசாரணைக்கஞ்சி பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad