புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2020

www.pungudutivuswiss.com
பேருந்து சேவை வடக்கில் இன்று ஆரம்பம்
வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வட இலங்கைத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது:

“கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாகப் போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவையை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளோம்.

வடக்கு மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையைப் பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக தனியார்பேருந்து சேவைகள் யாவும் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும்.

குறிப்பாக பஸ்ஸில் பயணம் செய்யும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதாவது கைகளுக்குக் கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், நடத்துநர்கள் என சுமார் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் பொதுமக்களின் நலன் கருதியே இன்றைய தினத்தில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்க உள்ளோம்” என்றார்.

ad

ad