கனடாவில் 80 ஆயிரத்தை தாண்டியது தொற்று! - 6 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று 80 ஆயிரத்தையும், உயிரிழப்பு 6 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 80,142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,031 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், தொற்றுக்குள்ளாவோர் தொகை தொடர்ந்தும் குறைந்து வருகிறது. நேற்று 1030 பேருக்கு மாத்திரமே தொற்று கண்டறியப்பட்டது. இது மார்ச் 29 ஆம் திகதிக்குப் பின்னர் குறைந்த எண்ணிக்கையாகும்.
அதேவேளை நேற்று 119 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம திகதி 170 பேர் மரணமடைந்த பின்னர், உயிரிழப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்டதே அதிகபட்ச உயிரிழப்பாகும்