புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 மே, 2020

www.pungudutivuswiss.comபாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீட்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (01) தெரிவித்தார்.இந்நிலையில் ஏற்கனவே 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடுதிரும்பும் 3 பேரையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் குணமடைந்துள்ளனர்.