புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 மே, 2020

www.pungudutivuswiss.com
யாழில் போதை மாத்திரை விற்ற கில்லாடி சிறுவன் கடலுக்குள் கைது
யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த கைது ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று (12) மாலை சற்றுமுன் இடம்பெற்றது.

வேலணை – வெள்ளைக்கடற்கரை (சாட்டி) பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தச் சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனைக் கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த சிறுவன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார். அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று சிறுவனை கரைக்குக் கொண்டு வந்தனர்.

சிறுவனை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். தனக்கு போதை மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து சாட்டி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.