புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2020

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா!

கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இரணவில வைத்தியசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த மாணவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 8 மாண வர்களுக்கும் கொரோனா பரிசோதனையைச் செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ad

ad