புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 அக்., 2020

புங்குடுதீவு . இப்போதைய நிலை  
----------------------------------------------------
 11  ஆம் 12 ஆம்  வடடாரங்களில் சுமார் 41  குடும்பங்கள்  தனிமைப்படுத்தல் 
கொழும்பு நாரகன்பிட்டிய   ஆடை  தொழில் சாலையில் பணியாற்றிய பெண்  ஒருவர்  புங்குடுதீவுக்கு  சென்றதையடுத்து புங்குடுதீவு  முடக்கப்பட்டது . இவரது வீட்டுக்கு அண்மிய பகுதிகளான  11  ஆம் 12 ஆம்  வடடாரங்களை  சேர்ந்த  சுமார்  41  குடும்பங்களை சேர்ந்த 160 பேர்  வாணர் அரங்கடியை   சூழ்ந்த 11  ஆம் 12 ஆம்  வடடாரங்களில்    முடக்கி வைக்கப்பட்டுள்ளன ர் ஊருக்கு சென்ற பெண் அங்கெ ஒரு பிறந்த நாள் விழாவிலும் பங்குபற்றியமை மேலும்  பலரை  தொடர்புக்குள்ளாகியிருந்தது  மடத்துவெளி  பழையதுறையில்  போலீசார் கடடற்படையினர்  அரச  நிர்வாக பிரிவுகள் சுகாதார பிரிவு என முகாமிட்டுள்ளனர் .புங்குடுதீவு மக்கள்  எவரும் வெளியே செல்லவோ  உள்ளே  செல்லவோ  அனுமதி இல்லை .  புங்குடுதீவுக்கு வெளியே உள்ள  உறவினர்கள்  உள்ளே  முடக்கப்பட்டுள்ள  உறவுகளுக்கு அத்தியாவசியப்பொருட்களை  வழங்க விரும்பினால் பாளையத்துறைக்கு சென்று பொருட்களை  வழங்கலாம்  மறுபக்கத்தில்  உறவினர்  வந்து எடுத்து செல்வர் இது போன்றே  கடை முதலாளிகள்  யாழ் நகரில் இருந்து  பொருட்களை  வாகனங் களில்  எடுத்துவர  அழைப்பு  விடுத்து  இதே இடத்தில  வந்து  எடுத்து செல்கின்றனர் .குறிகாட்டுவானில்  நெடுந்தீவு நயினாதீவு மக்கள்   யாழ்நகர் செல்ல  பேரூந்துகள்  குறிப்பிட நேரங்களில் மட்டும்  ஒழுங்கு செய்யப்ப ட்டுள்ளன.  கொரோன பரிசோதனைக்குப்படுத்தப்படட  15  பேரின்  முடிவுகளில் 12   கிடைக்கப்பெற்றுள்ளன,  தொற்று இல்லை என  உறுதி படுத்தப்பட்டுள்ளது அனைத்து முடிவுகளும் கிடைத்த பின்னர்  அடுத்து வரும் நாட்களில் முடக்கம் நீக்கப்படுமா அல்லது  இன்னும்  1  வாரத்துக்கு மேலாக  நீடிக்கப்படுமா என  முடிவாகும்