இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.