புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2020

ஐரோப்பிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தல் – தொடர் தாக்குதல்களின் எதிரொல

www.pungudutivuswiss.com
பாரிஸ், நீஸ், வியன்னா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பிய எல்லைகள் பாதுகாப்பு நிறுவனமான frontex விடுத்துள்ள அறிக்கையில் தரை மார்க்கமாக ஐரோப்பாவுக்குள் நுழையும்வதிவிட உரிமை அற்றவர்களின் தொகை கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு கடல் மார்க்கமாக மத்தியதரைக் கடல் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைந்தவர்களின் தொகை குறைந்துள்ளது.

குறிப்பாக மேற்கு பல்கன் நாடுகள் ஊடாக ஐரோப்பாவிற்குள் நுழைவோர் தொகை இரட்டிப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 3,500 பேர் ஐரோப்பாவுக்குள் நுழைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களில் 19 700 வதிவிட உரிமை அற்றவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை 2019 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குள் நுழைந்த வதிவிட உரிமை அற்றவர்களின் தொகையிலும் பார்க்க இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகமானவர்கள் சிரியா,ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இதேபோன்று கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தவர்கள் 13400பேர் என்றும் இந்த தொகை கடந்த 2019ம் ஆண்டை விட 37 விதமாக குறைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி,கிரீஸ் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் வதிவிட உரிமையற்றவர்களின் தொகை 75 வீதமாக குறைந்துள்ளது.

முன்பு ஒரு காலகட்டத்தில் வதிவிட உரிமை அற்றவர்கள் அதிகமாக இந்தப் பாதை வழியாகத்தான் ஐரோப்பாவிற்குள் நுழைவது வழக்கம்.

ஆனால் frontex தனது நடவடிக்கைகளை இந்த பகுதியில் தீவீரப்படுத்தியதன் காரணமாக இந்த வழியால் நுழைபவர்கள் தொகை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

ad

ad