புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2020

மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது?10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய 10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினமான 27 ஆம் திகதி காலையிலிருந்து மாலை வரையில் இவ்வாறு குழுக்களாகச் சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பாளர்களை இதற்காக இதற்காக எதிர்வரும் சனிக்கிழமை சந்தித்தப் பேசுவது எனவும், அதன் பின்னர் இவ்விடயத்துக்கான ஒழுங்ககள் குறித்து இறுதி முடிவை எடுப்பதெனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய கூட்ட முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது;

“இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம்.

அதாவது தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதென தீர்மானித்திருந்தோம். மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீர்மானித்தோம். கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.

மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்.

மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம்.”

ad

ad