புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2020

டயர் 3 பிளஸ்(+) என்னும் மேலும் இறுக்கமான லாக் டவுன் லண்டனில் நாளை…

www.pungudutivuswiss.com
பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் லண்டனில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படலாம்லண்டனில் எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதி ப்புடன் சேரும் நோய்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க லண்டனில் அபாயகர அளவில் உயர்ந்து கொண்டே போகும் பாதிப்பு அளவை டயர் 3 என்றில்லாமல், டயர் 3 பிளஸ் என்ற அளவுக்கு மேலும் கடுமையாக்கலாம் என்று கவுன்சில் தலைவர்கள் கூறுகிறார்கள். லண்டனைத் தொடர்ந்து எஸ்ஸெக்ஸ் நகரும் டயர் 2 என்ற நிலையில் இருந்து டயர் 3 ஆக உயர்த்தப்படலாம் என்று தெரிய வருகிறது. அங்கு விடுதிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளரங்க நிகழ்ச்சிகள், தனியார் தோட்டங்கள் அல்லது வெளிப்புற வளாகங்கள் ஆகியவற்றில் குடும்ப உறுப்பினர்கள் நீங்கலாக வேறு யாருடனும் சேர்ந்து செல்ல முடியாது.

வெளிப்புறங்களான பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற இடங்களில் 6 பேர் வரை குழுவாக இடைவெளி விட்டு சந்திக்கலாம்.

கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்காரம் போன்ற தனி பராமரிப்பகங்கள் திறக்கப்பட்டிருக்கலாம்.

மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் அவற்றில் பார்சல் சேவை வழங்கப்படலாம்.

விளையாட்டரங்குகளில் ரசிகர்கள் பார்வையிட அனுமதியில்லை.

உள்ளரங்க பொழுபோக்கு பகுதிகளான திரையரங்குகள், ஸ்னோபோலிங் மையங்கள் போன்றவை மூடப்பட்டிருக்க வேண்டும்.

டயர் 3 பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவர்.

லண்டனைச் சுற்றியுள்ள சில பகுதிகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன.

கடந்த நவம்பர் 12 முதல் கடந்த வாரம் வரையிலான காலத்தில் முதல் 100 வைரஸ் பாதித்த இடங்களில் ஹேவரிங், 85ஆது இடத்தில் இருந்தது. இப்போது அந்த இடம் 5ஆவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 506 பேருக்கு பாதிப்பு என்ற வகையில் வைரஸ் பாதிப்பு கடுமையாகி வருவதாக பிபிசி இங்கிலாந்து தரவுகள் பிரிவின் ராப் கூறுகிறார்.

ad

ad