புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2020

சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட தொற்றாளர்களின் உடல்களை மட்டும் புதைத்தது ஏன்

www.pungudutivuswiss.com
இலங்கை தவிர ஏனைய நாடுகள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

சிலபிரிவு மக்களுக்கு எதிரான இனஉணர்வுவின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை. உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன . உடல்களை புதைப்பதால் நிலடித்தடிநீர் பாதிக்கப்படும் என நிபுணர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறாயின் மஹர சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில் மாத்திரம் இது ஏன் பொருந்தவில்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad