புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2021

வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துமாறு கொழும்பில் இருந்து உத்தரவு!

www.pungudutivuswiss.com
மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது

.மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால்

முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் எனவும் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

ad

ad