புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2021

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

www.pungudutivuswiss.com
உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைக்கு (எஸ்.எல்.பி.எம்) என பெயரிடப்பட்டுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், மேற்பார்வையிட்ட இராணுவ அணிவகுப்பில் இந்த ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட கொரிய நிபுணர் அங்கித் பாண்டா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய ஆண்டு, புதிய புகுக்சோங்’ என குறிப்பிட்டுள்ளார்.



வட கொரிய அரசாங்க ஊடகங்கள் வெளியிட்ட படங்களில், குறைந்தது நான்கு பெரிய கருப்பு மற்றும் வெள்ளை ஏவுகணைகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வடகொரிய தனது இராணுவ வலிமையினை காட்சிப்படுத்தியுள்ளது.

இதேவேளை கிம் அண்மையில் அமெரிக்காவை தனது நாட்டின் மிகப்பெரிய எதிரி என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை கண்டு உலக நாடுகள் பல அச்சமடைந்துள்ளதாக பேசப்படுகிறது.

ad

ad