புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2021

சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் திரும்பியவர்கள் மடக்கப்பட்டனர் - எல்லையில் கடும் சோதனை!

www.pungudutivuswiss.com
சுவிற்சர்லாந்திற்கு விடுமுறை சென்று விட்டுப் பிரான்சிற்குள் வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படியாக சனிக்கிழமை மட்டும், 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Doubs நகர ஆணையம் தெரிவித்துள்ளது.
இவர்களிடம் கொரோனாப் பரிசோதனைப் பெறுபேறுகள் இருப்பினும், இவர்கள் சென்று வந்த பகுதிகள் ஆபத்து மிகுந்தவை என்பதால், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் உள்ள பனிச்சறுக்குத் தடத்திற்குச் சென்று வந்தமையால், கொரோனாத் தொற்று ஆபத்தினால் இவர்கள் தனிமைப்படுத்பட்டுள்ளனர்.

கொரோனாத்தொற்று அதிகரிக்கும் ஆபத்து என்பதால், பிரான்சில் பனிச்சறுக்குத் தடங்கள் அதை;தும் மூடப்பட்டே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனால் சுவிற்சர்லாந்து நோக்கியோ அல்லது ஸ்பியின் நோக்கியோ பனிச்சறுக்கிற்குச் செல்லவேண்டாம் என்று மக்கள் எச்சரிக்கப்பட்டும் இருந்தனர்.
நேற்று மட்டும் சுவிற்சர்லாந்து எல்லையில், 200 வாகனங்கள் சோதனைக்கு உடபடடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad