புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2021

உத்தரபிரதேசத்தில் சுடுகாட்டு கட்டிட மேற்கூரை இடிந்து 23 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

www.pungudutivuswiss.com
உத்தரபிரதேசத்தில் முதியவர் ஒருவரின் உடல் தகனத்தின்போது, சுடுகாட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு இன்று ஜெய்ராம் (வயது 65) என்ற முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால், உடல் தகன நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட ஏராளமானோர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
சமீபத்தில் கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடம் பலத்த மழை காரணமாக பலவீனமடைந்து

ad

ad