புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2021

புலிகளைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்த ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்கலாம

www.pungudutivuswiss.com
விடுதலைப் புலிகளை நானே கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சொன்னதையே மனித உரிமைகள் மீறலுக்கான பெரிய சாட்சியமாக வைத்தே, அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகளை நானே கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சொன்னதையே மனித உரிமைகள் மீறலுக்கான பெரிய சாட்சியமாக வைத்தே, அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடர் இன்ற காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இன்றைய களசூழலில், தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தவிசாளர்கள்,பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வயில் அச்சுறுத்தி வருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அண்மையில் உலகத் தமிழர் பேரவை மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம் நியூயோர்க் பல்கலைக்கழகம் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களை சாட்சியமாக கொண்டு, நடவடிக்கை எடுக்க முடியுமெனவும், சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்

ad

ad