புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2021

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

www.pungudutivuswiss.com
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று துவங்கியது. பகல் இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தி விளையாடப்படும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா பந்து வீசியது.


இந்திய அணியில் அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இவர்களில் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்த்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 112- ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் சுப்மன் கில் (11 ரன்கள்) ஏமாற்றம் அளித்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரகானே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

ad

ad