தண்டர் பே மாவட்டம் மற்றும் சிம்கோ-முஸ்கோகா மாவட்ட சுகாதார அலகுகள் சாம்பல் நிலை முடக்கநிலைக்குள் நகரும். கொவிட்-19 இன் சமீபத்திய பரவல்கள் மற்றும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை மார்ச் 1ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் கொரோனா முடக்கநிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டர் பே மாவட்டம் மற்றும் சிம்கோ-முஸ்கோகா மாவட்ட சுகாதார அலகுகள் சாம்பல் நிலை முடக்கநிலைக்குள் நகரும். கொவிட்-19 இன் சமீபத்திய பரவல்கள் மற்றும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை மார்ச் 1ஆம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற பிராந்தியங்களும் அவற்றின் வண்ண மண்டலங்களுக்கு வரும்போது மாற்றத்தைக் காண்கின்றன என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நயாகரா பிராந்திய பொது சுகாதாரம், சாம்பல் மண்டலத்தில் இருந்தது இப்போது சிவப்பு நிறத்திற்கு நகர்த்தப்படும். சதம்-கென்ட் பொது சுகாதாரம், மிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு மற்றும் தென்மேற்கு பொது சுகாதாரம் ஆகியவை செம்மஞ்சள் மண்டலத்திற்கு மாற்றப்படும்.
ஹால்டிமண்ட்-நோர்போக் சுகாதார பிரிவு மற்றும் ஹூரான் பெர்த் பொது சுகாதாரம் ஆகியவை மஞ்சள் மண்டலத்திற்கு நகரும். கிரே ப்ரூஸ் ஹெல்த் யூனிட் இப்போது பசுமை மண்டலத்தில் இருக்கும்.