புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2021

தி.மு.க., கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியீடு

www.pungudutivuswiss.com
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் இறங்கி உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று கூறினார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பா.ம.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், தே.மு.தி.க.வுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளிவந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கவும், 178 இடங்களில் தி.மு.க. நேரடியாக போட்டியிட திட்டம் என கூறப்படுகிறது.
ம.தி.மு.க. மற்றும் வி.சி.க.வுக்கு தலா ஒரு சீட் குறையவும், தி.மு.க.வுக்கு 2 சீட் கூடுதலாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதன்படி, காங்கிரஸ் கட்சி 25, இந்திய கம்யூனிஸ்டு 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 7, ம.தி.மு.க. 5, வி.சி.க. 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொ.ம.தே.க. 2, தமிழக வாழ்வுரிமை 1 தொகுதியில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

ad

ad