இலங்கை அரசு பொறுப்புக்கூறும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும்.அந்தப் பிரேரணையை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"போர் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே நீதிக்காகவும், தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்.
பிரித்தானியா சில நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது முன்வைக்கவுள்ள பிரேரணையை வலுவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து உறுப்புரிமை நாடுகளும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்