புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2021

ஜூனில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த திட்டம்

www.pungudutivuswiss.com
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் மாகாணசபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் ஏன் தூண்டப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை. தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களால் நடத்தப்படுகின்றன. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலும் இந்த பிரச்சினை உள்ளது.

இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஒரு உயர் மட்ட அரசு வட்டாரம் நேற்று கூறியது. தேர்தல்களை நடத்துவதில் தாமதத்திற்கு இது ஒரு காரணியாக உள்ளதாகவும் சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad