புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2021

திருநெல்வேலி சந்தையும் மூடப்பட்டது

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021-222-6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும், மருத்துவர் கேதீஸ்வரன் கேட்டுள்ளார்

ad

ad