புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2021

யாழ்.நகர் முடக்கப்படுகிறது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாவது;
🛑யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.
🛑யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.
🛑 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.
🛑 வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.
🛑 உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
🛑 யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
🛑 யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன

ad

ad