புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2021

www.pungudutivuswiss.com
நாளை முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல முடியும் – அஜித் ரோஹண
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஒற்றை இலக்கம் உடைய நாளாக இருந்தால் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1,3,5,7,9 என இருப்பவர்கள் வெளியே வரலாம். நாளை 13 ஆம் திகதி மேற்படி நபர்கள் வெளியே வரமுடியும்.
இரட்டை இலக்கம் உடைய நாளாக இருந்தால் 2,4,6,8 ஆகிய இலக்கமுடையவர்கள் வரமுடியும். இறுதி இலக்கம் 0 ஆக இருந்தால் அது இரட்டை நாளுக்குரிய இலக்கமாக கருதப்படும்.
எனவே, வெளியே வருபவர்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்திலேயே கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்த முடியும்.
அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள், தொழிலுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்நடைமுறை பொருந்தாது. பொருட்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வருபவர்களுக்கே பொருந்தும்.
அதேவேளை, கர்ப்பிணி பெண்கள், இருதய நோயாளிகள் உட்பட அத்தியாவசிய தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தாது.” – என்றார்.

ad

ad