புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2021

பூம்புகார் கொலையில் திருப்பம் - மனைவியுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டியவர் சிக்கினார்!

www.pungudutivuswiss.com$


யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில்  மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் மனைவியிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியுடன் அவருக்கு இருந்த தொடர்பு தொடர்பில் எழுந்த பிரச்சினை தான் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை முன்னதாக கொல்லப்பட்டவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவிக்கையில் "கணவன் தினமும் மதுபோதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் வழமை போன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு தன்னை தாக்கிய போது, தான் ஆத்திரத்தில் கையில் அகப்பட்ட திருகுபலகையால் திருப்பி தாக்கிய போது , அவர் உயிரிழந்துவிட்டார்" என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் நேற்றிரவு திருவுபலகையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண்ணையும், அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆணையும், யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad