கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், எரின் ஓ டூல் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 3 ஆசனங்கள் குறைவாக, 118 ஆசனங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் என்டிபியே கிங் மேக்கராக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.