புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2021

நள்ளிரவில் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட மின் நிலையம்!

www.pungudutivuswiss.com


முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்,  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் வலு சக்தி முக்கியமானது . இத்துறை அரசுக்கு சொந்தமாக காணப்பட்ட வேண்டும். அமெரிக்க குடியுரிமையினை கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கெரவலபிடிய அனல்மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்து , அமைச்சரவை அனுமதியையும் வாய்மூல விளக்கப்படுத்தலுடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

கெரவலபிடிய அனல் மின்நிலையத்தின் ஊடாக தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம்முழுமையாக அரச நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கெரவலபிடிய மின்நிலைய அபிவிருத்திக்கான விலைமனுகோரல் கடந்த பெப்ரவரி மாதம் கோரப்பட்டது.ஆனால் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விலைமனுகோரலில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பின்பற்றாமல் குறித்து அபிவிருத்தி செயற்திட்டத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை யோசனை வாய் மூலமான விளக்கப்படுத்தல் ஊடாக முன்வைத்துள்ளார்.

அனல் மின்நிலையத்தின் 40 சதவீத பகுதியை விற்பனை செய்யவும், அனல் மின்நிலையத்தின் உள்ளக சேவைக்கான நிர்மான பணிகளை முன்னெடுக்கவும் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விலைமனுகோரல் இல்லாமல் நிர்மான அபிவிருத்தி பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இதில் எந்தளவிற்கு உண்மை தன்மை காணப்படும் என்பதை அறிய முடிகியது.

நிர்மான பணிகள் விவகாரத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. 5 வருட காலத்திற்கு எரிவாயு விநியோகிப்பதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கெரவளபிடிய மின்னிலையத்திற்குள் புதியதாக ஒரு எரிவாயு களஞ்சியசாலை நிர்மானிக்கப்பட்டால் அதற்கான உரிமமும் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கெரவலபிடிய மின்னிலையம் தனது குடும்ப சொத்து என கருதிக் கொண்டு நிதியமைச்சர் செயற்படுகிறார்.

அனல்மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீள பெறுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ராஜபக்ஷர்கள் ஆட்சிக்க வந்தார்கள். ஆனால் அன்று விற்கப்படும் போது ராஜபக்ஷர்கள் பாராளுமன்றிற்குள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விற்பதற்கு முழுமையான ஆதரவு வழங்கினார்கள்.

பொருளாதார கேந்திர நிலையத்தையும், தேசிய வளங்களையும் பிற நாட்டவர்களுக்கு விற்பதற்கான முயற்சியை ராஜபக்ஷர்கள் முன்னெடுத்துள்ளார்கள். கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் இரகசியமான முறையில் தேசிய வளங்களை விற்கிறது. மக்கள் வீதிக்கிறங்கி போராட முடியாத நிலை காணப்படுகிறது. இதனை ராஜபக்ஷர்கள் தங்களின் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ad

ad