புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2022

தீர்மானம் குறித்து கலந்துரையாடல் - இந்தியா மௌனம்!

www.pungudutivuswiss.com



சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது

அண்டை நாடான இந்தியா, சிறிலங்கா தொடர்பில் எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்துள்ளது.

பிரித்தானியா தலைமையில் இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரேரணையை சிறிலங்கா முற்றாக நிராகரித்துள்ளது.

இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இறுதி யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளாக சிறிலங்காவில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தமிழருக்கான தீர்வு வழங்குவதாக தொடர்ச்சியாக வாக்குறுதிகளை வழங்கி வந்தன ஆனாலும் இது வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் கொடுத்த வாக்குறுயை நிறைவேற்றவில்லை.

ஆகவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இனியும் சிறிலங்காவிற்கு வாய்ப்புக்கள் வழங்க முடியாது ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.

   
   

ad

ad