புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2022

இடைநிறுத்தப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com


மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் வருகைதந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தமது கோரிக்கைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களுடன் அங்கிருந்து ஆளுநர் தொலைபேசியில் உரையாடியதாகவும், விரைவில் தங்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கிய ஆளுநர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தாகவும், அவரின் வாக்குறுதியை ஏற்று தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துவதாக மேலும் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மூன்று கைதிகளையும் பார்க்க ஆளுநர் செல்வதாக தெரிவித்ததாக கைதிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad