யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் காதலன் கண்டித்ததால் ஆசிரியை ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன் நிருத்திகா என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் தனது காதலருக்கு தொியாமல் நண்பி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் காதலன் பலதடவை தொலைபேசி அழைப்பு எடுத்திருந்தபோதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பெண் திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை காதலனிடம் தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த காதலன் 8 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.
இதனால் மனவிரக்தி அடைந்த காதலி தவறான முடிவு எடுத்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியரான பெண் ஆறு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி விட்டுச் சென்றுள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கடிதத்தில் தனது மரணத்துக்கும் காதலனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் இந்த முடிவை நானே எடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்,
இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது,
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.