புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2022

பொதுமக்களிடம் உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

www.pungudutivuswiss.com

பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறி, எரிசக்தியை சேமிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. கிரிமியா பாலம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதனால் உக்ரைனின் மிசார திட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

திங்களன்று உக்ரைன் முழுவதும் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து சேதத்தை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். மேலும், பரவலான மின்சாரத் தடையை ஏற்படுத்தியதுடன் மின்சார ஏற்றுமதியை நிறுத்துவதாக உக்ரைன் அறிவிக்க காரணமாகவும் அமைந்தது.

மட்டுமின்றி, தலைநகரில் மின்தடை ஏற்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய பகுதிகளில் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும், மாலை 5 மணி முதல் 11 மணி வரையில் கண்டிப்பாக சிக்கனம் தேவை எனவும் பிரதமர் Denys Shmyhal மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்றுபட்டால் வென்று விடலாம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் Denys Shmyhal, வீட்டில் பயன்படுத்தும் மின் உபகரணங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, திங்களன்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 108 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad