புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2022

அணு ஆயுதங்களுடன் களமிறங்கியது நேட்டோ!

www.pungudutivuswiss.com

ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

இதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்ய பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று நான் சும்மா பிதற்றவில்லை என புடின் எச்சரித்தார்.

மேலும் 11 Tu-160 அணுகுண்டுகளை பின்லாந்து மற்றும் நோர்வே எல்லைகளுக்கு அருகில் புடின் நகர்த்தி இருப்பதை செயற்கைகோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தின.

இந்த நிலையில் 14 உறுப்பு நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நோட்டோவின் அணு ஆயுதப் பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெறும் என நேட்டோ தெரிவித்துள்ளது.

ஸ்டெட்ஃபாஸ்ட் நூன் (Steadfast Noon) என அழைக்கப்படும் "அதிக உணர்திறன்" நிகழ்வு, போர் விமானங்களில் இருந்து அணு குண்டுகளை வீசும் கூட்டாளிகளின் திறனை சோதிக்கும் என நேட்டோ தெரிவித்துள்ளது.

இந்த போர் பயிற்சியில் அமெரிக்காவின் US B52 அணு ஆயுத விமானம் மற்றும் B61 அணு குண்டுகளை தாங்கி செல்லும் ஜேர்மனி, பெல்ஜியம் ஆகியவற்றின் போர் விமானங்கள், பிரித்தானியா, வடக்கு கடல் மற்றும் பெல்ஜியம் வான் பரப்பில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவின் வருடாந்திர போர் பயிற்சிகள் நாளை பிரித்தானியாவில் தொடங்கிறது. நேட்டோவின் அணு ஆயுதங்கள் 4,178 ஆகவும், ரஷ்யாவிடம் 5,977 ஆகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad