புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2022

வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்

www.pungudutivuswiss.com
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர் | Drug Sale In Jaffna Drug Usage In Jaffna
பாடசாலையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள கடையொன்றில் வெற்றிலை விற்பனை என்ற போரவையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனை இடம்பெற்று வருவதாகவும்,

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு அடிமையாவதாகவும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் மானிப்பாய் காவல்துறையினரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது, 5 பாக்குகள் கைப்பற்றப்பட்டதாகவும் அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதான இளைஞர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ad

ad