புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2022

T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி

www.pungudutivuswiss.com
நமீபியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை நமீபியா 55 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றி இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச அரங்கில் நமீபிய கிரிக்கெட் அணி பெற்ற முதல் வெற்றியாகவும் மாறியிருக்கின்றது. அத்துடன் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெறாத நாடு ஒன்றிடம் T20I போட்டிகளில் இலங்கை அடைந்த முதல் தோல்வியாகவும் இது காணப்படுகின்றது.

T20 உலகக்கிண்ணம் சாத்தியமா? ; வரலாற்றின் பலத்துடன் களமிறங்கும் இலங்கை!

அவுஸ்திரேலியாவின் கீலோங் நகரில் ஆரம்பித்த இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு பின்னடைவாக தொடரில் இருந்து வெளியேறிய வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்கவின் இழப்பு காணப்பட்டிருந்தது. எனினும் ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான் ஆகியோர் அணியில் இணைந்திருந்தனர். அதேநேரம் சரித் அசலன்கவிற்குப் பதிலாக தனன்ஞய டி சில்வாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசன், மகீஷ் தீக்ஷன

நமீபியா XI – டிவான் லா கொக், மைக்கல் வேன் லின்கன், ஸ்டீபன் பார்ட், ஜான் நிகோல், லொப்டி ஈடோன், கெர்ஹாட் எரஸ்மஸ், ஜேன் பிரைலிங், JJ ஸ்மிட், டேவிட் விஸே, ஷேன் கீரின், பெர்னாட், பென் ஸ்கோல்ட்ஸ், பென் சிக்கோங்கோ

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நமீபிய அணிக்கு போட்டியின் இரண்டாவது ஓவரில் ப்ரமோத் மதுசான் நெருக்கடி உருவாக்கினார். இதனால் அவர்களின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான மைக்கல் வான் லின்கன் 03 ஓட்டங்களுடன் ஓய்வறையை நோக்கி நடக்க வேண்டிய நிலைமை உருவாகியது.

இதன் பின்னர் முன்வரிசை வீரர்களான டிவான் லா கொக் (09) மற்றும் லொப்டி ஈட்டோன் (20) ஆகியோரும் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

எனினும் அணித்தலைவர் கெர்ஹாட் எரஸ்மஸ் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக நல்ல இணைப்பாட்டம் (41) ஒன்றினைப் பெற்றதோடு, வனிந்து ஹஸரங்கவின் விக்கெட்டாக 20 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.


கெர்ஹாட் எரஸ்மஸின் விக்கெட்டினைத் தொடர்ந்து நமீபியா சற்று தடுமாற்றம் காட்டிய போதும் JJ ஸ்மிட் மற்றும் ஜேன் பிரைலிங்கின் அதிரடி ஆட்டத்தோடு அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது.

நமீபிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜேன் பிரைலிங் 28 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுக்க, JJ ஸ்மிட் 16 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் ஜேன் பிரைலிங் – JJ ஸ்மிட் ஜோடி நமீபிய அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 70 ஓட்டங்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் ப்ரமோத் மதுசான் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, துஷ்மன்த சமீர, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் வெறும் 06 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க 09 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். இதன் பின்னர் புதிய வீரராக வந்த தனுஷ்க குணத்திலக்கவும் ஓட்டமேதுமின்றி ஏமாற்றினார்.

தொடர்ந்து வந்த வீரர்களில் பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் ஏமாற்றம் கொடுக்க இலங்கை கிரிக்கெட் அணி 19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 108 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இலகு வெற்றியுடன் சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர்

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவர் தசுன் ஷானக்க 23 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பானுக்க ராஜபக்ஷ 20 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

நமீபிய அணியின் பந்துவீச்சு சார்பில் டேவிட் விஸே, பெர்னாட் ஸ்கோல்ட்ஷ், பென் சிக்கோங்கோ மற்றும் ஜேன் பிரைலிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக நமீபிய அணி வீரர் ஜேன் பிரைலிங் தெரிவாகியிருந்தார். இனி இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத்தில் விளையாடும் அடுத்த போட்டி நாளை மறுதினம் (18) ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

RESULT

Namibia
163/7 (20)
Sri Lanka
108/10 (19)
NAMIBIA WON BY 55 RUNS

Updated at 12:52 PM 2022-10-16



BATSMEN R B 4S 6S SR
Pathum Nissanka c JJ Smit b Ben Shikongo 9 10 1 0 90.00
Kusal Mendis c Zane Green b David Wiese 6 4 0 0 150.00
Dhananjaya de Silva c Ben Shikongo b Jan Frylinck 12 11 1 0 109.09
Dhanushka Gunathilake c Zane Green b Ben Shikongo 0 1 0 0 0.00
Bhanuka Rajapaksa c Divan la Cock b Bernard Scholtz 20 21 2 0 95.24
Dasun Shanaka c Zane Green b Jan Frylinck 29 23 2 1 126.09
Wanidu Hasaranga c Jan Nicol Loftie-Eaton b Bernard Scholtz 4 8 0 0 50.00
Chamika Karunaratne c Stephan Baard b JJ Smit 5 8 0 0 62.50
pramod madushan run out (Zane Green) 0 0 0 0 0.00
Dushmantha Chameera c Gerhard Erasmus b David Wiese 8 15 0 0 53.33
Maheesh Theekshana not out 11 11 0 1 100.00

Extras 4 (b 0 , lb 2 , nb 0, w 2, pen 0)
TOTAL 108/10 (19 Overs, RR: 5.68)
BOWLING O M R W ECON
Gerhard Erasmus 1 0 8 0 8.00
David Wiese 4 0 16 2 4.00
Bernard Scholtz 4 0 18 2 4.50
Ben Shikongo 3 1 22 2 7.33
JJ Smit 3 0 16 1 5.33
Jan Frylinck 4 0 26 2

ad

ad