புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2023

எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் உதயகலா!

www.pungudutivuswiss.com


சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி செல்வராணி,

வடகிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது உறவுகளை கொடுத்துவிட்டு அலைந்து திரிந்து தமது உறவுகளை தேடிவருகின்றனர்.இறுதி யுத்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்த நிலையில் காணாமல்போனார்கள்.இதேபோன்று வீடுகளிலிருந்து கடத்திச்செல்லப்பட்டும் காணாமல்போனார்கள்.தனது உறவுகளை தொலைத்துவிட்டு கண்ணீருடன் தேடிவரும் நிலையில் எங்கோயிருந்து வந்து அரசாங்கத்தின் அடிவருடிபோல் இருந்து கொண்டு காணாமல்போனவர்கள் இல்லை,போரில் இறந்துவிட்டனர்.காணாமல்போனவர்கள் என்பது பொய் என்பதுபோன்ற கருத்துகளை தெரிவித்துவரும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலாவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று சர்வதேசமே இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நிலையில் யாரோ போடும் எலும்புகளுக்கு வாலாட்டும் உதயகலா போன்றவர்கள் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.எட்டு மாவட்டங்களிலும் உறவுகளை தொலைத்து விட்டு போராடுபவர்களை கொச்சைப்படுத்தி வருவதை நிறுத்த அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும்.

எம்மைப்பற்றி கதைப்பதற்கு உதயகலாவுக்கு எந்த தகுதியுமில்லை.மோசடியிலீடுபட்டு தப்பிச்சென்று மீண்டும் இலங்கை வந்து யாரினதோ தேவையினை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான கருத்துகளை தெரிவித்துவருகின்றார்.

ad

ad