புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2023

யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!

www.pungudutivuswiss.com



யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவும் இந்த பொருளாதார நெருக்கடி நிமிர்த்தமாக குறைந்த வருமானம் பெருகின்ற வறுமைக்குள் உள்ளாகி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக ஜனாதிபதியின் யோசனைகளுக்கு அமைய இந்த திட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நாட்டு விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்து அந்த நெல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற குடும்பங்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு அமைய அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசாங்க அதிபர்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைந்திருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்து அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெட்டயர் வயல்நிலம் இருக்கின்ற போதும் எங்களுக்கு 300 ஹெட்டயர் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எங்களுக்கு 25 ஹெட்டயர் நெல்லை கூட கொள்வனவு செய்ய முடியாது போயிருந்தது.

அதனால் நாங்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு அமைய தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அரிசி கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதன் மிகுதித்தொகை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைக்க இருக்கின்றது.

தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளை வழங்கித்தான் நாங்கள் வாழ வேண்டும் என்கின்ற நிலை இருக்கக்கூடாது நாங்கள் என்னென்ன தொழிலை மேற்கொள்ளுகின்றோமோ அவற்றுள் மிக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற அடிப்படையில் குடும்பங்களை தெரிவு செய்து இருந்தாலும் எங்களுடைய ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்ற செலவினங்களை பார்த்தால் நாங்கள் அந்த வறுமையில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என நான் நம்புகின்றேன்.

இங்கிருக்கின்ற அநேகமாணவர்களிடம் கை தொலைபேசி இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கைத்தொலைபேசி இருக்கும் அந்த கைத்தொலைபேசிக்கு மாதமாதம் செலவழிக்கின்ற காசு எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தோமாக இருந்தால் அதில் 50% சேமிக்க முடியுமாக இருந்தால் எங்களுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்க முடியும்.

இவ்வாறு பல அனாவசியமான செலவுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எங்களுடைய நாடு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றது. நாங்கள் எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தினுடைய கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களிடத்தில் என்ன வளங்கல் இருக்கிறதோ அந்த வளங்களை மிக உச்ச அளவில் பயன்படுத்தி முதலில் எங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முயற்சி எடுக் வேண்டும்.

அரசாங்கம் அதைத் தரவில்லை இதைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டுதை மட்டும் வாசகமாக வைத்திருப்பதை தவிர்த்து அரசாங்கத்தினுடைய உதவிகளோடு நீங்களும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டமும் ஒரு சிறப்பான திட்டம் விலைவாசிகள் காரணமாக பயிற்செய்கைக்கு தேவையான பசளை விதைநெல் ஏனைய கூலிகள் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற போது, காலநிலையும் விவசாயிகளுக்கு பாதகமான சூழ்நிலையில் காணப்படுகின்றது. அவர்கள் மிக கஷ்டப்பட்டு இந்த நெல்லை உற்பத்தி செய்து அதை காய வைக்கின்ற நேரத்தில் கூட மழை பெய்து அதை அழிக்கின்ற நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே தங்களுடைய உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிகள் தங்களுக்குரிய சரியான விலை கிடைக்காமையினால் அவதிப்பட்ட வண்ணம் இருந்தார்கள்

இதனால் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தது 88 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் நெல்உடைய தரத்துக்கு அமைவாக அதனை கொள்வனவு செய்வதாக அறிவித்தது.

இந்த நெல் கோள்வனவினை அந்த அந்த மாவட்டங்களில் இருக்கின்ற அரசாங்க அதிபர்கள்தான் அதனை செய்ய வேண்டும் எனவும், ஏனெனில் அதிலும் கருப்பு சந்தைக்காரர்களுடைய தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக.

இதில் இரண்டு விதமான நன்மைகள் இருக்கின்றது ஒன்று விவசாயிகள் தங்களுடைய நெல்லுக்கு போதிய விலையை பெற்றுக் கொள்ளுதல், அதேவேளை தற்காலிகமாக வறுமைக்கு உட்பட்டிருக்கின்ற பொதுமக்கள் தங்களுடைய சிக்கலை தவிப்பதற்கு ஒரு தற்காலிக ஏற்பாடு கிடைக்கின்றது.

இன்றைக்கு எங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய இளம் சமுதாயம் பற்றி தென்பகுதியில் இருக்கின்ற நண்பர்கள் கதைக்கின்ற போது வியப்பாகவும் கவலையாகவும் கேட்கின்றார்கள் யாழ் மாவட்டம் அவ்வளவு மோசமாக போய்விட்டது ஏன் என.

நாட்டில் இருக்கின்ற தேசிய பத்திரிகைகள் எதனை எடுத்தாலும் யாழ் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் தொடர்புடைய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன, இங்கிருக்கின்ற பெற்றோர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செலவு செய்கின்றார்கள், எங்கிருந்து காசு வருகின்றது போன்ற விடயங்களை கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் உங்களுடைய பிள்ளைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல உங்களுடைய கிராமம் மட்டுமல்ல இந்த நாடு சீரழிந்து போகின்ற நிலைமை ஏற்படும். நாங்கள் போலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா இது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார்.

அது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று மிக விரைவில் நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த குற்ற செயல்களை எவ்வாறு தடுப்பது, இதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுபவர்களை எவ்வாறு இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வேலை திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாக இருந்தால் இயல்பாகவே எங்களுடைய கிராமங்களிலே, எங்களுடைய நகரங்களிலே குற்றச்செயர்கள் குறையும். இந்த மாவட்டத்தினுடைய கௌரவம் காப்பாற்றப்படும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய கௌரவமும் பெருமையும் மதிப்பும் பேணப்படும் உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும்.

ஆனபடியால் உங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். என்னிடம் நேற்றைய தினம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். வறுமையில் வாடுகின்ற குடும்பங்களில் இருந்து தான் போதைவஸ்து பாவிப்பவர்கள் வருகின்றார்களாக இருந்தால் அவர்களுடைய குடும்பத்த போய் பார்த்தால் அங்கே வறுமையாக இருக்கின்றது, அங்கே வசிப்பதற்கு கூட போதிய இடம் இல்லாமல் இருக்கின்றார்கள் என சொல்லுகின்றார்கள். ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் என சொல்லுகின்றார்கள், ஆனால் ஒருநாள் போதைவஸ்து பாவிப்பதற்கு 15,000 வரைக்கும் அந்த குடும்பத்தவர்கள் செலவழிக்கின்றார்களாக இருந்தால் அந்தக் பணம் எங்கிருந்து வருகின்றது இது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை

இதற்குப் பின்னால் இருக்கின்ற ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறீர்கள்.

அவ்வாறானால் அந்த குடும்பம் வறுமையான குடும்பமா? அந்தப் பையனுக்கு அல்லது அந்த பெண்ணுக்கோ எங்கிருந்து காசு கிடைக்கிறது இவை போன்ற கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும் இதில் மிக கவனம் செலுத்த வேண்டும்.

இது சம்பந்தமாக உரிய தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் உங்களுடைய பிரதேசங்களில் இவ்வாறான குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களை நீங்கள் இனம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

உங்களுடைய கிராம உத்தியோகத்தர் இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஆகக்குறைந்தது அவர்களுக்காவது அல்லது போலிஸாருக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அல்லது சமூக சேவை உத்தியோகத்திற்கு யாருக்காவது இந்த தகவல்களை தெரிவித்து உங்களுடைய கிராமங்களில் இந்த குற்றங்களை செய்வவர்கள் வராதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான, சிறந்த சமுதாயத்தில் உள்ளவராக நீங்கள் மாற முடியும் என இவ்விடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ad

ad