-

27 மார்., 2023

வெடுக்குநாறி மலை சிவன் உடைப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com


வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம்  உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது.

வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாறி மலை கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad